பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்தியப் பெண் வழக்கு: சமீபத்திய தகவல்கள்
பிரித்தானியாவில் இந்தியப் பெண் ஒருவரும் அவரது பிள்ளைகள் இருவரும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று அந்தப் பெண்ணின் கணவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார்.
கொடூரமாக கொலை செய்யப்பட்ட செவிலியரும் குழந்தைகளும்
இங்கிலாந்திலுள்ள Kettering என்ற இடத்தில் வாழ்ந்துவந்த செவிலியரான அஞ்சு அசோக் (40), அவரது பிள்ளைகளான ஜீவா சாஜு (6) மற்றும் ஜான்வி சாஜு (4) ஆகியோர் கடந்த வியாழக்கிழமை காலை கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
பொலிசார் தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்றபோது அங்கு ஆடை முழுவதும் இரத்தத்துடன் காணப்பட்ட அஞ்சுவின் கணவரான சாஜுவை (52) கைது செய்தனர்.
photo: Special arrangement
சமீபத்திய தகவல்கள்
வழக்கில் முக்கிய குற்றவாளி என சந்தேகிக்கப்படும் சாஜூ மீது பொலிசார் மூன்று கொலை வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
இன்று, திங்கட்கிழமை, சாஜு Northampton மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுகிறார்.
photo: Special arrangement
சாஜுவின் மனைவி மற்றும் பிள்ளைகள் கழுத்து நெறிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனையின் தெரியவந்துள்ள நிலையில், சாஜு எதற்காக தன் மனைவியையும் அழகான தன் இரண்டு குழந்தைகளையும் கொலை செய்தார் என்பது தொடர்பான உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
photo: Special arrangement