இந்திய வம்சாவளி முதியவர் மிதித்தே கொல்லப்பட்ட விவகாரம்: சிறுவன் மீது கொலைக்குற்றச்சாட்டு
இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி முதியவர் ஒருவர் மிதித்தே கொல்லப்பட்ட பயங்கர விவகாரத்தில், சிறுவன் ஒருவன் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மிதித்தே கொல்லப்பட்ட இந்திய வம்சாவளியினர்
இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி, தன் நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் சென்றுவிட்டு வீடு திரும்பிகொண்டிருந்த பீம் சென் கோலி (Bhim Sen Kohli, 80) என்னும் இந்திய வம்சாவளியினரான முதியவரை, ஒரு கூட்டம் சிறுவர்கள் கொடூரமாக தாக்கியுள்ளார்கள்.
Credit: Terry Harris
ஐந்து சிறுவர்கள் கோலியை சூழ்ந்துகொண்டு, அவரை மிதித்துக் கீழே தள்ளி, அவரது கழுத்திலும் முதுகெலும்பிலும் மாறி மாறி மிதித்துள்ளார்கள்.
அந்த சிறுவர்கள் குற்றுயிராக கோலியை விட்டு விட்டு ஓட்டம் பிடிக்க, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோலி, கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்துவிட்டார்.
Credit: PA
கோலி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் ஆடைகள் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை முன்னர் நடத்திவந்துள்ளார்.
சிறுவன் மீது கொலைக்குற்றச்சாட்டு
Credit: Bav Media
கோலி தாக்கப்பட்டது தொடர்பாக ஒரு 14 வயது சிறுமி, இரண்டு 12 வயது சிறுமிகள் உட்பட ஐந்து சிறுவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.
தற்போது, 14 வயது சிறுவன் ஒருவன் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இந்த சம்பவத்தைப் பார்க்கும்போது, பிரித்தானியாவில் இனவெறுப்பு அடங்குவதுபோல் தெரியவில்லை.
அரசியல்வாதிகள்தான் இனவெறுப்பை ஊதிப்பெரிதாக்கிக்கொண்டே இருக்கிறார்கள் என்றால், எதிர்கால சந்ததியாகிய இந்த சிறுவர்களும் கொஞ்சம் கூட இரக்கம் பார்க்காமல் ஒரு முதியவரை கொடூரமாக தாக்கிக் கொன்றுள்ளதைப் பார்க்கும்போது, பிரித்தானியா மாறாது என்றே தோன்றுகிறது.
Credit: Terry Harris
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |