தெறிக்கவிட்ட லுக் ஷா..மான்செஸ்டர் யுனைடெட் அபார வெற்றி
ப்ரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-2 என்ற கணக்கில் நாட்டம் ஃபாரெஸ்ட் அணியை வீழ்த்தியது.
லுக் ஷா கோல்
ஓல்டு ஃட்ராபோர்ட் மைதானத்தில் நடந்த ப்ரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் நாட்டம் ஃபாரெஸ்ட் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 5வது நிமிடத்திலேயே யுனைடெட் வீரர் லுக் ஷா (Luke Shaw) உயர பறந்துவந்த பந்தை, தடுத்து ஷூட் செய்து கோலாக மாற்றினார்.
பின்னர் 52வது நிமிடத்தில் ஃபாரெஸ்ட் வீரர் மொரட்டோ தலையால் முட்டி கோல் அடிக்க, அடுத்த இரண்டு நிமிடங்களில் மத்தேயூஸ் குன்ஹா மிரட்டலாக கோல் அடித்தார்.

காஸ்மிரோ நன்றி
அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் யுனைடெட் அணியின் பிரையன் பெயுமோ கோல் அடித்தார்.
77வது நிமிடத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஃபாரெஸ்ட் அணியின் ஒயிட் கோல் அடித்தார். அதன் பின்னர் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க போராட, அந்த முயற்சிகள் தடுக்கப்பட்டன.

இறுதியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் காஸ்மிரோ, தனது மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக கடைசி உள்ளூர் போட்டியில் விளையாடிய பிறகு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |