மன்னர் சார்லஸ் முகத்துடன் எப்போது அஞ்சல் தலை, நாணயங்கள் புழக்கத்திற்கு வரும்?
அஞ்சல் தலை, நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் செல்லுபடியாகுமா என்ற கேள்விக்கு அதிகாரிகள்
அதற்கான உறுதியான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
பிரித்தானியாவில் ராணியார் மறைந்துள்ள நிலையில், இளவரசர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில், இதுவரை புழக்கத்தில் இருந்துவந்த அஞ்சல் தலை, நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள் செல்லுபடியாகுமா என்ற கேள்விக்கு அதிகாரிகள் ஏற்கனவே பதிலளித்துள்ளனர்.
ஆனால் தற்போது, மன்னர் சார்லஸ் முகம் பதித்த நாணயங்கள், அஞ்சல் தலை, பணத்தாள்கள் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
@pa
உண்மையில் அதற்கான உறுதியான தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை என்றே கூறப்படுகிறது. அடுத்த நான்கு மாதங்களுக்கு இதில் எந்த மாறுதலும் இருக்காது என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராணியாரின் இறுதிச்சடங்குகளுக்கு பின்னர், உரிய முடிவெடுக்கப்படும் என்றே கூறப்படுகிறது.