மனிதர்களை கொல்லும் திறன் கொண்ட ஆபத்தான பறவை.., எது தெரியுமா?
பூமியில் வாழும் மிக முக்கியமான உயிரினமாகப் பறவைகள் உள்ளன.
இந்நிலையில், உலகின் அதிக ஆபத்தான பறவை இனங்களில் ஒன்றாக காசோவரிகள் கருதப்படுகிறது.
இந்த காசோவரி பறவைகள் மனிதர்களைத் தாக்கும் போது உயிரிழப்பே கூட ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இவை ஆஸ்திரேலியா மற்றும் நியூ கினியாவின் வெப்பமண்டல மழை காடுகளில் வாழ்கின்றன.
நீல முகம், தலைக்கவசம் போன்ற உறுப்பு மற்றும் பயங்கர கூர்மையான நகங்களுடன் இவை 310 கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
இந்த காசோவரி பறவைகள் ஒரு சராசரி மனிதனின் உயரத்திற்கு வளரும்.
இந்த பெரிய பறவைகள் பறக்க முடியாவிட்டாலும், நம்பமுடியாத அளவுக்கு வேகமாக ஓடும். இது மணிக்கு 50 கிமீ வேகத்தில் கூட ஓடும் திறனைக் கொண்டுள்ளது.

வேட்டையாடும் போது அல்லது பயத்தில் இருக்கும் போது காசோவரிகள் சுமார் ஏழு அடி உயரம் வரை குதித்து எதிரிகளை உதைக்கும்.
மேலும், கூர்மையான நகங்களைக் கொண்டு அது எந்தவொரு விலங்காக இருந்தாலும் அதைக் குத்தி கிழிக்கும்.
சில பழங்குடியின கலாச்சாரங்களில் காசோவரி பறவைகள் முக்கிய இடத்தை பெற்றுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |