ஒரே போட்டியில் 4 கோல்கள் அடித்த வீரர்! கோல் மழையால் அபார வெற்றி
லா லிகா தொடரில் கிரோனா கிளப் அணி 4-2 என்ற கோல் கணக்கில் ரியல் மேட்ரிட் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.
கோல் மழை
ஸ்பெயினின் Estadi Montilivi மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் பலம் வாய்ந்த ரியல் மாட்ரிட் அணியை எதிர்கொண்டது கிரோனா அணி.
ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் கிரோனா அணியின் வேலெண்டின் காஸ்டெலனோஸ் கோல் அடித்தார். அதனைத் தொடர்ந்து 24வது நிமிடத்தில் அவரே மீண்டும் ஒரு கோல் அடித்தார்.
Image: Getty
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரியல் மாட்ரிட்டின் வினி ஜூனியர் 34வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். அதன் பின்னர் நடந்த இரண்டாம் பாதியில் ரியல் மாட்ரிட் அணிக்கு வேலெண்டின் சிம்மசொப்பனமாக விளங்கினார்.
ஒரே போட்டியில் 4 கோல்கள்
மின்னல் வேகத்தில் செயல்பட்ட அவர் 46 மற்றும் 62 என இரண்டு கோல்கள் அடித்து மிரள வைத்தார். ரியல் மாட்ரிட் வீரர் லுகாஸ் வஸ்யூஸ் 85வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இறுதியில் கிரோனா அணி 4-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள ரியல் மாட்ரிட்டை 9வது இடத்தில் உள்ள கிரோனா அணி வீழ்த்தியுள்ளது.
Image: Getty Images
லா லிகா ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு எதிராக 4 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை காஸ்டெலனோஸ் பெற்றார். இவர் அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.