முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் விளக்கெண்ணெய்.., எப்படி பயன்படுத்துவது?
Castor oil remedies for hair growth- பலருக்கும் அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது.
ஆனால் மாசு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் முடி உதிர்தல் மற்றும் முடி வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
அந்தவகையில் விளக்கெண்ணெய் தலைமுடி பராமரிப்புக்கு பெரிதளவில் உதவுகிறது.
விளக்கெண்ணெய் ஸ்கால்ப்பை ஈரப்பதமாக வைத்திருக்கவும், முடி உடைவதைக் குறைக்கவும் உதவும்.
அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க விளக்கெண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- விளக்கெண்ணெய்- 3 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 3 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் வெந்தயப் பொடி சேர்த்து நன்றாக கலக்கவும்.
இந்த கலவையை ஸ்கால்ப்பில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும்.

பின்னர் 30 நிமிடங்கள் வைத்திருந்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசலாம்.
இதனை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்துவதால் முடிக்கு நல்ல வளர்ச்சியை தரும்.
2. தேவையான பொருட்கள்
- விளக்கெண்ணெய்- 3 ஸ்பூன்
- நெல்லிக்காய் பொடி- 2
- கற்றாழை ஜெல்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு கிண்ணத்தில் விளக்கெண்ணெய், நெல்லிக்காய் பொடி மற்றும் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் தயாரிக்கவும்.
இதனை உச்சந்தலை மற்றும் தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
பின்னர் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசிக்கொள்ளலாம். இதனை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |