முடி வளர்ச்சியை அதிகரிக்க இந்த ஒரு எண்ணெய் போதும்.., எப்படி தெரியுமா?
Castor oil remedies for hair growth- பலருக்கும் அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது.
ஆனால் மாசு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் உள்ளிட்ட காரணங்களால் முடி உதிர்தல் மற்றும் முடி வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் விளக்கெண்ணெய் தலைமுடி பராமரிப்புக்கு பெரிதளவில் உதவுகிறது.
விளக்கெண்ணெய் ஸ்கால்ப்பை ஈரப்பதமாக வைத்திருக்கவும், முடி உடைவதைக் குறைக்கவும் உதவும்.
அந்தவகையில், முடி வளர்ச்சியை அதிகரிக்க விளக்கெண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. தேவையான பொருட்கள்
- விளக்கெண்ணெய்- 2 ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலக்க வேண்டும்.
இதனைத் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் 45 நிமிடங்கள் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வர முடி நன்கு நீளமாகவும் வளரும்.
2. தேவையான பொருட்கள்
- விளக்கெண்ணெய்- 2 ஸ்பூன்
- கற்றாழை- 1 ஸ்பூன்
எப்படி பயனப்டுத்துவது?
முதலில் ஒரு விளக்கெண்ணெயுடன் கற்றாழை ஜெல்லைச் சேர்த்துக் கலக்க வேண்டும்.
இதனைத் தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் மென்மையான ஷாம்பு பயன்படுத்தி அலசிக்கொள்ளலாம்.
இதனை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |