முழங்கால் வரை முடி வளர உதவும் பராம்பரிய எண்ணெய்: எப்படி பயன்படுத்துவது?
முடி வளர்ப்பது என்பது தற்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு ஆசை.
பலபேருக்கு வழுக்கை, முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பிரச்சனைகள் காரணமாக முடி கொட்டி விடுகின்றன.
அந்தவகையில், அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு பாரம்பரியமான ஆமணக்கு எண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
பயன்படுத்தும் முறை
1. ஆமணக்கு எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயை சமஅளவு கலந்து உச்சந்தலையில் வாரம் இருமுறை மசாஜ் செய்யவும்.
2. ஆமணக்கு எண்ணெய், 2 வைட்டமின் ஈ மாத்திரைகள் மற்றும் தேங்காய் எண்ணெயை சமஅளவு கலந்து தடவினால் முடி உதிர்வது தடுக்கப்படும்.
3. வெங்காயச் சாறு, ஆமணக்கு எண்ணெய் சேர்த்து 2 வைட்டமின் ஈ மாத்திரைகளை கலந்து பருத்தி துணியால் உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவவும்.
4. ஆலிவ் எண்ணெய், மிளகுக்கீரை எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து முடியில் தடவி ஒரு மணி நேரம் கழித்து முடியை அலசவும்.
5. சம அளவு தேங்காய் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் கலந்து முடியில் தடவவும். இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |