சுவிஸ் நாட்டவரால் பூனைக்கு நேர்ந்த கொடுமை...
சுவிட்சர்லாந்தில், பூனை ஒன்றின்மீது அம்பெய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Zizers என்ற கிராமத்தைச் சேந்த Patrick என்பவருக்கு சொந்தமான பூனை ஒன்றின்மீது, ஒருவர் அம்பு ஒன்றை எய்துள்ளார்.
மோனா என்ற அந்த பூனையில் உடல் வழியாக அம்பு பாய்ந்த நிலையில் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் அது கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த பூனையை மருத்துவரால் காப்பாற்ற முடியவில்லை.
இப்படி ஒருகுரூர செயலை எப்படி ஒருவரால் செய்யமுடியும் என பொங்கியுள்ள Patrick, தனக்கு நடந்த சோகத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு செல்லப்பிராணிகள் வைத்திருக்கும் மற்றவர்களை எச்சரித்துள்ளார். இந்நிலையில், 48 வயதுள்ள ஒருவர், தான்தான் அந்த அம்பை எய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால், ஏன் அவர் அப்படி செய்தார் என்பதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.
பொலிசார் அவரை கைது செய்துள்ளார்கள். விலங்கு ஒன்றை துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.