பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் மன உளைச்சலில் விபரீத முடிவு
பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மன உளைச்சலில் விபரீத முடிவு எடுத்துள்ளார்.
இளைஞர் உயிரிழப்பு
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (25). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, இரண்டு பூனைகள் சண்டை போட்டுக் கொண்டிருந்தததால் அவைகளை விரட்ட முயன்ற போது ஒரு பூனை இளைஞரை கடித்துள்ளது.
இதற்கு அவர் சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருந்ததால் புண் பெரிதாகி தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் அங்கிருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு அரசு மருத்துவமனையில் ரேபிஸ் சிகிச்சை வார்டில் நேற்று இரவு அனுமதித்து உள்ளனர். அப்போது அவர் அங்கிருந்து அவர் தப்பியோட முயன்றதால் அவரை பிடித்து ரேபிஸ் சிகிச்சை பிரிவில் தனி அறையில் அனுமதித்தனர்.
ஆனால், அவர் கடுமையான வலி மற்றும் மன உளைச்சல் காரணமாக மருத்துவமனையில் உள்ள போர்வையால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |