பூனைக்கு 9 உயிர் என்பது உண்மைதானோ! வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே புரியும்
சிகாகோவில் ஒரு பூனை தீவிபத்து ஏற்பட்ட 5 மாடி கட்டிடத்திலிருந்து குதித்து உயிர் பிழைத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் llinois மாகாணத்தில் உள்ள சிகாகோ நகரத்தில் வியாழக்கிழமை 5 மாடி கட்டிடத்தில் தி விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிகாகோ தீயணைப்பு படையினர், கட்டிடத்தில் இருந்த மக்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டனர்.
தீயணைப்பு பணியில் ஈடுபட்டபோது, அவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். அப்போது ஒரு கருப்பு நிற பூனை தீயின் சூடு தாங்கமுடியாமல் ஒரு ஜன்னலின் விளிம்பில் வந்து நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தது.
பிறகு நம் உயிரை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என நினைத்ததோ என்னவோ, நான்கு மாடி உயரத்திலிருந்து குதித்து, சூப்பர் கேட் போல கால்களை விரித்தபடி பறந்து, மதில் சுவற்றைக் கடந்து, புல்வெளியில் குதித்தது.
அதனைப் பார்த்த சிலர் பூனை குதித்ததைப் பார்த்து அலறினர், நொடிப்பொழுதில் அந்த பூனையின் வாழ்க்கை முடிந்தது என கருதினர். அனால், அந்த பூனையோ அசால்டாக குதித்த அந்த நொடியே எழுந்து ஓடியது.
Nine lives for a cat that jumped from fire at 65th and Lowe. Cat hit grass bounced and walked away! pic.twitter.com/LRBsjMta2Z
— Chicago Fire Media (@CFDMedia) May 13, 2021
இந்த ஆச்சரியமான காட்சி அங்கிருந்தவர்களை வியப்படைய வைத்தது. சிகாகோ தீயணைப்பு துறை இந்த வீடியோவை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து, உலக மக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ கிட்டத்தட்ட 3 லட்சம் பயனர்கள் பார்த்துள்ளனர்.
பூனைக்கு 9 உயிர்கள் உள்ளன என்று சொல்வதைக் கேட்டிருப்போம், இந்த கூற்று உண்மைதானோ என நினைக்கத் தூண்டுகிறது இந்த அதிசய பூனையின் வீடியோ.