ஈஸ்டர் குண்டுவெடிப்பு... பாதிக்கப்பட்டவர்களை புனிதர்களாக அறிவிக்க இலங்கை கத்தோலிக்க தேவாலயம் முடிவு
ஈஸ்டர் ஞாயிறு அன்று கொல்லப்பட்ட 11 இந்தியர்கள் உட்பட 273 பேரையும் புனிதர்களாக அறிவிக்க இலங்கையின் கத்தோலிக்க தேவாலயம் முடிவு செய்துள்ளது.
கர்தினால் மால்கம் ரஞ்சித்
கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தின் ஐந்தாவது ஆண்டு நினைவேந்தலின் போது கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் இந்த நகர்வினை அறிவித்துள்ளார்.
@ap
ஞாயிறன்று முன்னெடுக்கப்பட்ட திருப்பலியில் கர்தினால் மால்கம் ரஞ்சித் குறிப்பிடுகையில், ஒருவர் தியாகம் செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரே அவரை புனிதர் என்று அழைக்க முடியும்.
எனவே, ஈஸ்டர் ஞாயிறன்று பாதிக்கப்பட்டவர்களை இந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி புனிதர்களாக அறிவிப்பதை நோக்கி நகர்வோம் என்றார். ஏப்ரல் 21, 2019 அன்று, உள்ளூர் இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான தேசிய தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த ஒன்பது தற்கொலை குண்டுதாரிகள், இலங்கையில் உள்ள மூன்று தேவாலயங்கள் மற்றும் பல சொகுசு ஹொட்டல்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தினர்.
இழப்பீடும் வழங்கப்படவில்லை
குறித்த தாக்குதல்களில் 270 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்தியாவிடமிருந்து முன்கூட்டியே உளவுத் தகவல்கள் கிடைத்த போதிலும் தாக்குதலைத் தடுக்க செயலற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
மட்டுமின்றி, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு சிறிசேனா மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து இதுவரை முழுமையான இழப்பீடும் வழங்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி சிறிசேனாவும் இந்த விவகாரத்தில் தம் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு, அரசுடன் போராடி வருபவர் கர்தினால் மால்கம் ரஞ்சித்.
அத்துடன் அனைத்து விசாரணைகளையும் ஒரு ஏமாற்று வேலை என்றும் அரசியல் மூடிமறைப்பு என்றும் சாடியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |