பிரான்சில் பரபரப்பு! கத்தோலிக்க பாதிரியார் படுகொலையில் திடீர் திருப்பம்: அகதி சரண்
பிரான்சில் கத்தோலிக்க பாதிரியார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு பிரான்சில் உள்ள Mortagne-sur-Sèvre-ல் கத்தோலிக்க பாதிரியார் ஒலிவியர் மைர் (60) கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை காவல்நிலையத்திற்கு சென்ற ருவாண்டா அகதி Emmanuel Abayisenga, பாதிரியாரை நான் தான் கொன்றேன் என குற்றத்தை ஒப்புக்கொண்டு பொலிசிடம் சரணடைந்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் பாதிரியார் ஒலிவியர் மைர்-ன் உடலை கண்டெடுத்துள்ளனர்.
Je veux rendre hommage au Père Olivier Maire, supérieur des Montfortains assassiné par un criminel qu’il hébergeait par charité. Sa mort témoigne de la bonté de ce prêtre que je connaissais bien et et dont j’avais pu apprécier la profondeur de la foi. Sa mort est une grande perte pic.twitter.com/NbH1KogPvR
— Bruno Retailleau (@BrunoRetailleau) August 9, 2021
Emmanuel Abayisenga, ஜூலை 2020-ல் Nantes தேவாலயத்திற்கு தீ வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
2020 ஆம் ஆண்டில், தேவாலயத்திற்கு தீ வைத்ததற்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்ட Abayisenga, நீதித்துறை மேற்பார்வையில் இருந்தார் என்பது நினைவுக் கூரத்தக்கது.
அவரது புகலிட விண்ணப்பத்தை நிராகரித்ததற்கு பழிவாங்குவதற்காக தேவாலயத்திற்கு தீ வைத்ததாக Abayisenga குற்றத்தை ஒப்புக்கொண்டார் என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.