அகதியிலிருந்து உலகமே திரும்பிப் பார்க்கும் ராப் பாடகரான ஒரு இலங்கைத் தமிழ்ப்பெண்ணின் கதை: கனடாவில் ஒளிபரப்பு
கனடாவின் பிரபல தொலைக்காட்சி ஒன்று இம்மாதம் பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
அவற்றில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த மாயா என்ற ராப் பாடகியின் கதையைச் சொல்லும் ஆவணப்படமும் அடக்கம். கனடாவின் பிரபல தொலைக்காட்சியான CBC, தனது CBC Gem என்னும் தளத்தில் மாயாவின் ஆவணப்படம் வெளியாகிறது.
லண்டனில் இலங்கைத் தமிழர்களான பெற்றோருக்குப் பிறந்து மீண்டும் இலங்கைக்குத் திரும்பிய மாதங்கி, இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போது மீண்டும் குடும்பத்துடன் லண்டனுக்கே திரும்பினார்.ஒரு அகதியாக தனது வாழ்வை தொடங்கிய மாதங்கி, பின்னர் மாயாவானார்.
அதன்பின், உலகம் அவரை M.I.Aவாக சந்தித்தது. உலகம் முழுவதும் தற்போது ராப் பாடகராக வலம் வருகிறார் M.I.A. தனது பாடல்களில் தான் கண்ட தமிழ் அரசியல் முதல் பல்வேறு விடயங்களைக் கலந்து சுவையாக கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தளிக்கிறார் M.I.A.
அவரைக் குறித்த MATANGI/MAYA/M.I.A. என்னும் ஆவணப்படம்தான் தற்போது கனடாவில் தனது CBC Gem என்னும் தளத்தில் வெளியாகிறது.