தந்தையை இழந்த இளம்பெண்: நிறுவனம் செய்த செயலுக்கு குவியும் பாராட்டுகள்
இளம்பெண்ணொருவர் தன் தந்தையை இழந்த நிலையில், அவர் வேலை செய்யும் நிறுவனம் அவருக்காக எடுத்த நடவடிக்கைகளை பலரும் பாராட்டிவருகிறார்கள்.
கோயம்புத்தூரிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் இளம்பெண்ணொருவரின் தந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் உயிரிழந்துள்ளார்.
நிறுவனம் செய்த செயலுக்கு குவியும் பாராட்டுகள்
இந்நிலையில், அந்த இளம்பெண் தன் தந்தைக்காக செய்த மருத்துவ செலவில் 20 சதவிகிதத்தை அவரது நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன், அந்த இளம்பெண்ணுக்கு ஒரு மாதம் விடுப்பும் வழங்கியுள்ளது அந்த நிறுவனம்.
அது மட்டுமின்றி, அந்த நிறுவனத்தில் 4,000க்கும் மேற்பட்டோர் பணி செய்யும் நிலையில், அந்த நிறுவனத்தின் தலைவரே தனிப்பட்ட முறையில் அந்தப் பெண்ணிடம் நலம் விசாரித்துள்ளார்.
my sister works for a traditional company that was built out of coimbatore.
— Vibin Babuurajan 👋 (@vibinbaburajan) August 12, 2026
here’s what her company did after she lost her dad last week:
→ beared 20% of the medical expenses
→ gave her over 4 weeks of leave
→ the chairman personally messaged to check in on her
mind you,…
இந்த செய்தியை அந்தப் பெண்ணின் சகோதரர் சமூக ஊடகம் ஒன்றில் பகிர, இந்தக் காலத்தில் இப்படி ஒரு நிறுவனமா என பலரும் வியந்துள்ளதுடன், அந்நிறுவனத்துக்கு பாராட்டுகளையும் தெரிவித்துவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |