விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன் - தவெக வேட்பாளர் நேர்காணல் ஒத்திவைப்பு?
கரூரில் 27 செப்டம்பர் 2025 அன்று நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது.

விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக, ஏற்கனவே இருமுறை தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியது.

டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு நேரில் சென்ற விஜய், சிபிஐ அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.
திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம்; குழந்தைகளுக்கு மோதிரம் - பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த விஜய்
இந்நிலையில், நாளை மீண்டும் விசாரணைக்காக நேரில் ஆஜராக வருமாறு விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்காக நாளை தவெக வேட்பாளர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடைபெற இருந்த நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை விஜய் டெல்லி சென்றால் வேட்பாளர் நேர்காணல் ஒத்திவைக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே திட்டமிட்ட அரசியல் நிகழ்வுகள் உள்ளதால், விஜய் தரப்பில் இருந்து கால அவகாசம் கேட்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைய, சிபிஐ மற்றும் தணிக்கை வாரியம் மூலம் பாஜக அழுத்தம் கொடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இன்று ஜனநாயகன் திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியம் படத்தை பார்ப்பதாக இருந்த நிலையில், தணிக்கை வாரிய உறுப்பினரின் உடல்நலக் குறைவு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |