CBSE 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது- எப்படி பார்ப்பது?
நாடு முழுவதும் உள்ள CBSE (Central Board of Secondary Education) 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது.
பொதுவாக, சிபிஎஸ்இ தேர்வுகள் பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு, முடிவுகள் மே மாதத்தில் வெளியிடப்படுவது வழக்கம்.
அந்தவகையில், CBSE 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் திகதி முதல் ஏப்ரல் 4ஆம் திகதி வரை நடைபெற்றது.
இந்த பொதுத்தேர்வு முடிவுகள் cbse.gov.in, cbseresults.nic.in, and results.cbse.nic ஆகிய இணையதளங்களில் வெளியாகியுள்ளது.
இந்தாண்டு, CBSE பொதுத்தேர்வுகளை 42 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதில் 88.39 சதவீத மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வழக்கத்தை போல் மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி 5 விகிதம் அதிகரித்துள்ளது. 91 சதவீதத்துக்கும் அதிகமான மாணவிகள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை பார்ப்பதற்கு மாணவர்களுக்கு தேர்வு நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ரோல் நம்பர், பள்ளி எண், அனுமதி அட்டை ஐடி மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்கள் அவசியம்.
மேலும், மாணவர்கள் bse.gov.in, cbseresults.nic.in, results.cbse.nic.in, டிஜிலாக்கர், உமாங் செயலிகள், எஸ்எம்எஸ் மூலம் முடிவுகளை அறியலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |