12 மணிநேரம் மின்தடை ஏற்படும்.. இலங்கை மேலும் சீரழியும்! மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை
இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தாவிட்டால் பொருளாதார நிலைமை மேலும் சீரழியும் என மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க கூறியதாவது, மிரிஹான சம்பவத்தின் பின்னர் இரண்டு வாரங்களுக்குள் அரசியல் ஸ்திரமின்மை நிலைநாட்டப்படும் என்ற எதிர்பார்ப்புடன் இந்தப் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.
ஒரு மாதத்திற்கும் மேலாகியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நாட்டில் அரசியில் ஸ்திரத்தன்மை ஏற்படாவிட்டால் இந்த பதவியில் தொடர நான் விரும்பவில்லை.
அடுத்த இரண்டு நாட்களுக்கு இதே நிலை தொடர்ந்தால், நாட்டில் தினமும் 10 முதல் 12 மணிநேரம் மின்தடை ஏற்படும்.
இலங்கை தலைநகர் கொழும்பு சாலைகளை சூழ்ந்த ஆயுதமேந்திய ராணுவ வாகனங்கள்! வெளியான காணொளி
மேலும், எரிபொருள் மற்றும் மற்ற அத்தியாவசிய பொருட்கள் பெருமளவில் தட்டுப்பாடு ஏற்படும்.
பிரதமர், அமைச்சரவை மற்றும் மத்தியமைச்சர் என முறையான அரசாங்கம் இல்லாமல், இலங்கை கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன்(IMF) பேச்சுவார்த்தைகளை தொடர முடியாது என நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.