கமெரா இருப்பது தெரியாமல் குப்பைகளை கொட்டிய நபர்: அந்த குப்பையில் இருந்தது...
பிரித்தானியாவில் கமெரா ஒன்று தன்னைக் கண்காணிப்பது தெரியாமல் குப்பைகளை இன்னொருவரின் நிலத்தில் கொட்டிச் சென்ற ஒருவரை பொலிசார் தேடிவருகிறார்கள்.
காரணம், அவர் இன்னொருவர் நிலத்தில் குப்பை கொட்டியது மட்டுமல்ல, அந்த குப்பையில் இருந்தது கஞ்சா செடிகள்...
Kent பகுதி கவுன்சிலரான Wythall Adam என்பவரது நிலத்தில் அந்த நபர் கஞ்சா செடிகளை போட்டு சென்றுள்ளார்.
ஒரு முறை கமெராவில் சிக்கியது தெரியாமல், மீண்டும் வந்து அதே நபர் கஞ்சா செடிகளைக் கொட்ட, Adam அவரைக் கையும் களவுமாக பிடித்துள்ளார். நீ என்ன செய்கிறாய், பொலிசைக் கூப்பிடுவேன் என்று அவர் கூறவும், தன் காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளார் அந்த நபர்.Adam பொலிசாரிடம் அந்த கமெரா காட்சிகளை கொடுத்து விடயத்தைக் கூற, பொலிசார் அந்த நபரைத் தேடி வருகிறார்கள்.
Adam பொலிசாரிடம் அந்த கமெரா காட்சிகளை கொடுத்து விடயத்தைக் கூற, பொலிசார் அந்த நபரைத் தேடி வருகிறார்கள்.
இத்தனைக்கும் அந்த நபர் குப்பை கொட்டிய இடத்தில், நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் என்று கூறும் போர்டு ஒன்று இருந்ததுதான் வேடிக்கை!


