சாலை விபத்தில் நீதிபதி மரணமடைந்த சம்பவத்தில் புதிய திருப்பம்! வெளியான அதிர வைக்கும் சிசிடிவி காட்சி: திட்டமிட்டு கொலையா?
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் சாலை விபத்தில் சிக்கி நீதிபதி மரணமடைந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை 5 மணிக்கு Dhanbad சாலை ஓரத்தில் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் ஓடிக்கொண்டிருந்த போது வாகனம் மோதி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
அவ்வழியாக வந்த நபர் ஒருவர், அடிப்பட்டு கிடந்த நீதிபதியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி நீதிபதி ஆனந்த் உயிரிழந்துள்ளார்.
காலை உடற்பயிற்சிக்கு சென்ற நீதிபதி ஆனந்த் வீடு திரும்பாத நிலையில் குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
ஆனந்த் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், அவர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்ததை கண்டறிந்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனந்த் மரணத்தில் சந்தேகமடைந்த குடும்பத்தினர் பொலிசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, விபத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிசார், ஆனந்த் திட்டமிட்டு கொல்லப்பட்டாரா என் கோணத்தில் விசாரணையை முடக்கிவிட்டுள்ளனர்.
சிசிடிவி காட்சியில், ஆனந்த் வெறிச்சோடிய சாலையின் ஓரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் போது, பின்னால் நேராக அவரை நோக்கி சென்ற ஆட்டோ, அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சம்பவயிடத்திலிருந்து தப்பிச் செல்கிறது.
ஆட்டோ குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், விபத்து நடப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன் அது மர்ம நபர்களால் திருடப்பட்டதை கண்டுபிடித்துள்ளனர்.
धनबाद के ज़िला सत्र जज उत्तम आनंद का बुधवार सुबह मोर्निंग वॉक में एक ऑटो के ठक्कर में मौत का मामला गहराता जा रहा हैं @ndtvindia @Anurag_Dwary pic.twitter.com/oV3m3Ca6x0
— manish (@manishndtv) July 28, 2021
இந்நிலையில், Dhanbad நகரில் பல மாஃபியா கொலை வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதி ஆனந்த் திட்டமிட்டு கொல்லப்பட்டாரா என பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.