10 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிய எலி - CCTV காட்சிகளை பார்த்து அதிர்ந்த ஊழியர்கள்
நகைக்கடையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளை எலி திருடி சென்றுள்ளது.
நகைகளை திருடிய எலி
கர்நாடகா மாநிலம், துமகூருவில் விஸ்வாஸ் ஜுவல்லரி என்ற நகைக்கடை இயங்கி வருகிறது.

இந்த கடை ஊழியர்கள் வழக்கம் போல் தினமும் நகைகளை எண்ணும் போது, ஒரே இரவில் சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 50 கிராம் நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால், கடையின் ஷட்டரோ, கதவோ உடைக்கப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் குழப்பமடைந்த ஊழியர்கள் CCTV காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போதும், மனிதர்களின் நடமாட்டம் எதுவும் தெரியவில்லை. சில நகைகளில் விலை குறியீடுகள் காணாமல் போயிருந்தன.

இதனையடுத்து, மீண்டும் CCTV காட்சிகளை ஆய்வு செய்த போது எலி ஒன்று நகைகளை எடுத்து செல்வதை கண்டறிந்தனர்.
அதன் பின்னர், எலியின் வழித்தடத்தை பின்தொடர்ந்து சென்ற ஊழியர்கள், எலியின் வளையை தோண்டி, அதில் இருந்த வைரம் பதிக்கப்பட்ட 10 தங்க மோதிரங்கள் மற்றும் 3 கழுத்தணிகள் உட்பட அனைத்தையும் கண்டறிந்தனர்.
🐀 KARNATAKA | RAT HEIST
— contentkikamii (@contentkikamii) July 30, 2026
According to reports a rat allegedly dragged diamond and gold jewellery worth around ₹10 lakh from a jewellery shop in Tumakuru.
After reviewing the CCTV footage staff traced the rat's burrow and recovered the missing jewellery.
🎥 CCTV#Karnataka… pic.twitter.com/MU9TdXNotk
நகைகளை எலி எடுத்து செல்லும் CCTV வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |