சிறுமியின் கழுத்தில் கீறல்கள்! லண்டனில் மர்ம நபரால் 11 வயது சிறுமிக்கு நேர்ந்த நிலை.. புகைப்படத்துடன் முக்கிய தகவல்
லண்டனில் 11 வயது சிறுமியை அணுகி அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்திய நபர் தொடர்பான முக்கிய தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
லண்டனின் வெல்லிங்கில் தான் இந்த சம்பவம் கடந்த 23ஆம் திகதி நடந்துள்ளது. அன்று மாலை 4.20 மணியளவில் 11 வயது சிறுமி ஒருவர் வழக்கம் போல நடன வகுப்புக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை அணுகிய ஆண் ஒருவர் சிறுமியை கட்டிபிடித்து கீழே தள்ளி விட்டு முத்தம் கொடுத்துள்ளார்.
இதன் காரணமாக சிறுமியின் கழுத்து பகுதியில் கீறல்கள் மற்றும் காயங்கள் ஏற்பட்டது. இதன்பின்னர் எப்படியோ அவனிடம் இருந்து தப்பிய சிறுமி பயந்தபடியே வீட்டுக்கு ஓடி சென்று நடந்த அனைத்தையும் தாயாரிடம் கூறினார்.
இந்த நிலையில் இதில் சம்மந்தப்பட்ட நபரின் சிசிடிவி புகைப்படங்களை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
அவனின் வயது 30ல் இருந்து 35 வரை இருக்கும் என தெரிவித்துள்ள பொலிசார் அவன் அணிந்திருந்த உடைகள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
யாருக்காவது அந்த நபரை அடையாளம் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.