லண்டன் இரட்டை கொலை: சிசிடிவி காட்சிகளுடன் பொலிஸார் முக்கிய அறிவிப்பு
லண்டனில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த இரட்டை கொலை தொடர்பாக துப்பு கொடுப்பவருக்கு 20,000 பவுண்ட்கள் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் வெள்ளிக்கிழமை வெவ்வேறு இடங்களில் அடுத்தடுத்து நடந்த 2 கொலைகள், இரட்டை கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த இரண்டு கொலைகளையும் Lee Peacock எனும் 49 வயது நபர் செய்து இருக்கலாம் என பொலிஸாரால் நம்பப்படுகிறது.
இந்நிலையில், லீ பீகாக் இடம் பெற்றுள்ள ரயில் நிலைய சிசிடிவி காட்சி ஒன்றை லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதனைப் பார்க்கும் பொது மக்கள், லீ பீகாக் பற்றிய தகவல் அறிந்தால் உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
❓ Have you seen this man? ❓
— Metropolitan Police (@metpoliceuk) August 23, 2021
Detectives have released CCTV footage of Lee Peacock to assist the public in helping locate him.
DSU Luke Marks: "Anybody who sees him, call police immediately on 999. I urge members of the public not to approach him."https://t.co/DJkz7dzPXz pic.twitter.com/yVdgEVzGnG
இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க உதவும் வகையில் துப்பு கொடுப்பவர்களுக்கு 20,000 பவுண்டுகள் சன்மானமாக அளிக்கப்படும் என புலனாய்வாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட்மினிஸ்டர் பகுதியில், ஆஷ்பிரிட்ஜ் தெருவில் உள்ள ஒரு வீட்டில் வியாழக்கிழமை இரவு 9.30 மணியளவில், 45 வயது மிக்க ஒரு பெண் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையில் ஈடுபட்ட நேரத்தில், வெள்ளிக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் பொலிஸாருக்கு மற்றோரு அழைப்பு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதே பகுதியில், அரை மைல் தொலைவில் இருக்கும் Jerome Crescent எனும் இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 59 வயதுடைய ஒரு ஆண் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இந்த இரண்டு கொலைகளையும் ஒரே நபர் செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
