முப்படை தளபதி பிபின் ராவத் மரணம்! நடந்தது என்ன? புறப்பட்டது முதல் விபத்தில் சிக்கிய வரை
தமிழகத்தில் இந்திய முப்படை தளபதி சென்ற இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிலையில், ஹெலிகாப்டர் புறப்பட்டது முதல் விபத்துக்குள்ளானது வரை தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் இராணுவ மையத்தில் நடைபெறவிருந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க, முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் திட்டமிட்டிருந்தார்.
இதற்காக இன்று காலை டெல்லியில் இருந்து, காலை 8.30 மணியளவில், விமான படைக்கு சொந்தமான K-3602 ரக விமானத்தில், தனது மனைவி உட்பட, பாதுகாப்பு வீரர்கள் என மொத்தம் 9 பேருடன் பிபின் ராவத் புறப்பட்டார்.
இதையடுத்து, கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் விமான படை தளத்திற்கு வந்த இந்த குழுவினர், அதன் பின் இங்கிருந்து காலை 11.27 மணிக்கு MI-17V5 ரக இராணுவ ஹெலிகாப்டரில், வெலிங்டன் இராணுவ மையத்திற்கு புறப்பட்டனர்.
இந்த விமானத்தில், பிபின் ராவத் குடும்பத்தினர் உட்பட மொத்தம் 14 பேர் பயணித்தனர். இதைத் தொடர்ந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்த போது, மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே கடுமையான பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் நஞ்சப்பன் சத்திரம் என்ற பகுதியில், கீழே விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் தற்போது வரை அதில் பயணித்த 9 பேரின் விபரம் வெளியாகியுள்ளது.
விமானத்தில் பயணித்தவர்கள் விபரம்
- முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்
- மதுலிகா ராவத் (பிபின் ராவத் மனைவி)
- பிரிகேடியர் லிடர்
- லெப்டினன் கர்னர் ஹர்ஜிந்தர் சிங்
- குர்சேவர் சிங்
- ஜிஜேந்தர் குமார்
- விவேக் குமார்
- சார் தேஜா
- கவில்தார் சத்பால்