ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்!
தமிழ்நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் மரணமடைந்தார்.
பிபின் ராவத் மரணமடைந்ததை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
ராஜ்நாத் சிங் ட்விட்டரில் பதிவிட்டதாவது, தமிழகத்தில் இன்று நடந்த மிகவும் துரதிர்ஷ்டவசமான ஹெலிகாப்டர் விபத்தில் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 ஆயுதப் படை வீரர்களின் திடீர் மரணம் ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது.
அவரது அகால மரணம் நமது இராணுவத்துக்கும் நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
ஜெனரல் ராவத் நாட்டிற்கு அசாதாரண தைரியத்துடனும் விடாமுயற்சியுடனும் சேவையாற்றினார். முதல் பாதுகாப்புப் படைத் தளபதியாக, அவர் நமது ஆயுதப் படைகளை இணைக்கும் திட்டங்களைத் தயாரத்திருந்தார்.
இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
வெலிங்டனில் உள்ள இராணுவ மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் ஜிபி கேப்டன் வருண் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
Deeply anguished by the sudden demise of Chief of Defence Staff Gen Bipin Rawat, his wife and 11 other Armed Forces personnel in an extremely unfortunate helicopter accident today in Tamil Nadu.
— Rajnath Singh (@rajnathsingh) December 8, 2021
His untimely death is an irreparable loss to our Armed Forces and the country.