தினந்தோறும் புதிய புதிய கட்டுப்பாடுகள்: பழங்காலத்துக்கு திரும்புகிறதா ஜேர்மனி?
ஜேர்மன் சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸின் ஆட்சியின் கீழ் ஜேர்மனி மீண்டும் பழங்காலத்துக்குத் திரும்புகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.
தினந்தோறும் புதிய புதிய கட்டுப்பாடுகள்
ஜேர்மனியில் ஆளும் கூட்டணியிலுள்ள Christian Democratic Union (CDU) கட்சியின் வர்த்தகப்பிரிவு, Part-time வேலைக்கு தடை விதிக்கும் திட்டம் ஒன்றை சமீபத்தில் முன்வைத்தது.
அப்பிரிவின் தலைவரான Gitta Connemann என்பவர், அதிக வேலை செய்யமுடிந்தவர்கள், அதிக செய்யவேண்டும் என்கிறார்.

ஏற்கனவே ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸும், நாட்டின் பொருளாதாரம் மெதுவாக முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில், வாரத்துக்கு நான்கு நாட்கள் வேலை, work-life balance எல்லாம் வேலைக்கு ஆகாது என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போது, பணியாளர்கள் நோய்வாய்ப்பட்டால், தொலைபேசி மூலம் அலுவலகத்தை அழைத்து, தங்களுக்கு உடல் நலம் சரியில்லை என கூறும் விடயத்துக்கு தடை விதிக்கவேண்டும் என அதே CDU கட்சி கூறியுள்ளது.
அதற்கேற்றாற்போல், ஜேர்மன் சேன்ஸலரான பிரெட்ரிக் மெர்ஸும், ஜேர்மனியில் உடல் நலம் சரியில்லை என்று கூறி விடுப்பு எடுப்போர் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

ஆக, நாட்டை நன்றாக ஆள்வதை விட்டுவிட்டு, மக்களுடையை அடிப்படை உரிமைகளில் கூட தலையிடும் வகையிலான புதிய புதிய விதிகளை தினமும் அறிமுகம் செய்துகொண்டிருக்கிறது ஜேர்மன் அரசு.
வேடிக்கை என்னவென்றால், ஆளும் கூட்டணியிலுள்ள Social Democrats (SPD) கட்சியே, பணியாளர்கள் நோய்வாய்ப்பட்டால், தொலைபேசி மூலம் அலுவலகத்தை அழைத்து, தங்களுக்கு உடல் நலம் சரியில்லை என கூறும் விடயத்துக்கு தடை விதிக்கவேண்டும் என கூறும் CDU கட்சியின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |