சீலிங் ஃபேனில் காற்று குறைவாக வருகிறதா? இதை செய்தாலே போதும்
உங்களது வீடுகளில் இருக்கும் சீலிங் ஃபேனில் காற்று குறைவாக வந்தால் நீங்கள் செய்ய வேண்டியது இது தான்.
என்ன செய்ய வேண்டும்?
ஏசி இல்லாத வீடுகளை கூட நாம் பார்த்து விடலாம். ஆனால், சீலிங் ஃபேன் இல்லாத வீடுகளை நாம் பார்க்க முடியாது. தற்போது கோடை காலம் நடைபெறும் நிலையில் சீலிங் ஃபேன் தேவை வீடுகளில் அதிகரித்திருக்கும்.
அந்த வகையில் உங்கள் வீட்டில் உள்ள சீலிங் ஃபேன் இருந்தால் நாட்கள் அதிகரிக்க அதன் வேகம் குறையும். ஆனால், நீங்கள் சில வழிமுறைகளை பின்பற்றினால் அதன் வேகம் குறையாமல் இருக்கும்.
சீலிங் ஃபேன் இறக்கைகளில் தூசி படிந்திருப்பது அதன் வேகத்தை குறைக்கும். அதனால் நீங்கள் அதனை சுத்தம் செய்ய வேண்டும். முதலில் தூசியை உலர்ந்த துணியால் சுத்தம் செய்து விட்ட பிறகு ஈரத்துணியால் துடைக்க வேண்டும்.
நீங்கள் சீலிங் பேனை வாங்கி பல ஆண்டுகள் ஆகியிருந்தால் கன்டென்ஸர் (Fan Condenser) கருவியை மாற்ற வேண்டும். சிலிண்டர் வடிவத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இந்த கன்டென்ஸர் தான் உங்களின் பேன் வேகத்தை தீர்மானிக்கிறது. இது ரூ.60 விலையில் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |