12-ம் வகுப்பு தேர்வில் 96 சதவீத மதிப்பெண்களை எடுத்ததால் 96 கேக்குகளை வெட்டி கொண்டாடிய பெற்றோர்
12-ம் வகுப்பு தேர்வில் 96 சதவீத மதிப்பெண்களை எடுத்த மாணவனுக்கு அவரது பெற்றோர் 96 கேக்குகளை வெட்டி கொண்டாடியுள்ளனர்.
கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு CBSE பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தங்களது சாதனைகளை மாணவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில் 12-ம் வகுப்பு தேர்வில் 96 சதவீத மதிப்பெண்களை எடுத்த மாணவனுக்கு அவரது பெற்றோர் 96 கேக்குகளை வெட்டி கொண்டாடியுள்ளனர்.
தங்களுடைய மகன் தேர்வில் 96 சதவீத மதிப்பெண்கள் எடுத்ததால் 96 கேக்குகளை அவரது பெற்றோர் ஓர்டர் கொடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ பதிவில், கம்லா நகரைச் சேர்ந்த வணிகவியல் மாணவர் யாஷ் அரோரா 96% மதிப்பெண் பெற்று அசத்தினார். அவரது பெற்றோர் மேஜிக்பின் செயலியில் இருந்து 96 கேக்குகளை ஓர்டர் செய்து கொண்டாடினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவுக்கு பயனர் ஒருவர் வேறு சிலர் உணவை இப்படி வீணாக்குகின்றனர் என்றும், இன்னும் சிலர் தங்களுடைய பிள்ளையின் சாதனையை பெற்றோர்களே கொண்டாடுகின்றனர் என்றும் பதிவிட்டுள்ளன.
BIG NEWS 🚨 CBSE Class 12 Results Are Out!
— Times Algebra (@TimesAlgebraIND) May 16, 2025
Yash Arora, a commerce student from Kamla Nagar, scored a stellar 96% – and his proud parents celebrated by ordering 96 cakes from magicpin app.
Even Cakezone shop staff was surprised by the massive order 😂😂#CBSE2025… pic.twitter.com/mpdLAOx2Rp
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |