மனோஜ் பாரதிராஜா மறைவு - சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் அஞ்சலி
மனோஜ் பாரதிராஜா மறைவு
இயக்குநர் பாராதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா நேற்று மாரடைப்பால் காலமானார்.
சில நாட்களுக்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று வீட்டில் ஓய்வில் இருக்கும் போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக மருத்துமனைக்கு கொண்டு சென்ற போது, அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவரின் திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தற்போது மனோஜின் உடல் இறுதி அஞ்சலிக்காக நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சினிமா அரசியல் பிரபலங்கள் அஞ்சலி
நேற்றிரவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, மாரி செல்வராஜ் உள்ளிட்ட சிலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினர்.
இதைத்தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண், மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
தொடர்ந்து தவெக தலைவர் விஜய், வி.கே.சசிகலா, நடிகர்கள் சூர்யா, சரத்குமார், கவுண்டமணி, செந்தில், ரோபோ சங்கர், கருணாஸ், நாசர், இயக்குநர் மணி ரத்னம், பி.வாசு சந்தான பாரதி, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ் கவிஞர் வைரமுத்து ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு பாரதிராஜாவிற்கு ஆறுதல் கூறினர்.
3 மணிக்கு மேல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |