இதயத்தை நொறுக்கியது! இவ்வளவு சீக்கிரமா? மொத்த தமிழ் திரையுலகையும் உலுக்கிய ஒரு மரணம்
பிரபல திரைப்பட விமர்சகர் கௌஷிக் இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொறியியல் பட்டதாரியான கௌஷிக் தமிழின் முன்னணி யூ டியூப் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக, திரைப்பட விமர்சகராக பணியாற்றி மிகவும் புகழ்பெற்றவர்.
நேற்று கௌஷிக் தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது. இறப்பதற்கு முன்பு கூட நடிகர் துல்கர் சல்மான் நடித்த சீதாராமம் படம் உலகளவில் 50 கோடி வசூலித்ததாக ட்வீட் செய்திருந்த நிலையில், அவரது மரணம் திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Heart breaking news... ?@LMKMovieManiac passed away due to cardiac arrest
— Troll Pullinga (@trollpullinga) August 15, 2022
Rip Brother?#BreakingNews #Shocking #lmk #kaushik pic.twitter.com/juxrmTbTYm
தனுஷின் டுவிட்டர் பதிவில், இதயத்தை சுக்குநூறா உடைக்குது.. இவ்வளவு சீக்கிரமா கெளஷிக்? குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார்.
This is heart breaking !! Rest in peace @LMKMovieManiac brother. Gone too soon. My deepest condolences to his family and friends.
— Dhanush (@dhanushkraja) August 15, 2022
ராகவா லாரன்ஸ் பதிவில், இது உண்மையில் அதிர்ச்சியை கொடுக்கிறது, நீங்கள் இல்லாததை நம்பமுடியவில்லை சகோதரரரே என பதிவிட்டுள்ளார். எஸ்.ஜே சூர்யாவின் பதிவில், இந்த சோகமான செய்தியை கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
This is really shocking !! Prayers to give more strength to his family and friends. Can't believe you are no more brother ? #RIPKaushikLM pic.twitter.com/8QQrK6RaFs
— Raghava Lawrence (@offl_Lawrence) August 15, 2022
மிக அற்புதமான மனிதர் கெளசிக், குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என பதிவிட்டுள்ளார். இதே போல பல திரையுலக பிரபலங்கள் கெளசிக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
I am out of words hearing this news. This is just unbelievable!! My heart goes out to his family and friends. Deepest condolences! Can't believe you are no more Kaushik!#RIPKaushikLM https://t.co/OxQd27ROwj
— Keerthy Suresh (@KeerthyOfficial) August 15, 2022
#RIPKaushikLM ????? Sock to hear the sad News … such a lovely person, very young , can’t digest this news …. Deepest Condolence to the family and friends ????sjs
— S J Suryah (@iam_SJSuryah) August 15, 2022