ட்விட்டரில் அங்கீகாரத்தை இழந்த ரஜினிகாந்த், கோலி உள்ளிட்ட பிரபலங்கள்! எலோன் மஸ்க் அதிரடி
உலகளவில் உள்ள பிரபலங்கள் பலர் ட்விட்டரில் Blue Tick சந்தா செலுத்தாததால் அங்கீகாரத்தை இழந்துள்ளனர்.
Blue Tick அங்கீகாரம்
சமூக வலைத்தளமான ட்விட்டரில் பிரபலங்கள் எனும் அங்கீகாரத்தை குறிக்கும் Blue Tickயை தங்கள் கணக்குகளில் பிரபலங்கள் வைத்திருந்தனர்.
ஆனால், Blue Tick அங்கீகாரத்திற்கு சந்தா கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், ஏப்ரல் 20ஆம் திகதிக்கு பின்னர் சந்தா செலுத்தியவர்களுக்கு மட்டுமே Blue Tick அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் ட்விட்டர் சி.இ.ஓ அறிவித்திருந்தார்.
சந்தா செலுத்தாத பிரபலங்கள்
இந்த நிலையில் சந்தா செலுத்தாத பிரபலங்கள் பலரும் தற்போது Blue Tick அங்கீகாரத்தை இழந்துள்ளனர். நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், ஷாருக்கான், அமிதாப் பச்சன் உட்பட பல திரைப் பிரபலங்களும், ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களான மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உள்ளிட்டோரும் தங்கள் கணக்குகளில் Blue Tick அங்கீகாரத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் உலகளவில் பிரபலமாக இருக்கும் பாப் நட்சத்திரம் பியோனஸ், போப் பிரான்சிஸ், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், தொலைக்காட்சி ரியாலிட்டி பிரபலம் கிம் கர்தாஷியன் ஆகியோரது Blue Tickயை சந்தா செலுத்தாததால் ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
எலோன் மஸ்க் கடந்த ஆண்டு ட்விட்டரை வாங்கியதில் இருந்து அவரது விருப்பத்திற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.