இரண்டாவது முறை தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்ட பிரபல பிரித்தானிய நடிகை
பிரித்தானிய தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள பிரபல நடிகை ஒருவர், இரண்டாவது முறையாக தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில், அது தொடர்பான புகைப்படங்களை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ளார்.
இரண்டாவது முறையாக திருமணம்
பிரித்தானிய தொலைக்காட்சித் தொடரான Coronation Street முதலான தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா (Bhavna Limbachia, 39).
பாவனாவின் கணவரான தாரனும் (Darren Kuppan) ஒரு நடிகர்தான். அவரும் Emmerdale மற்றும் Coronation Street முதலான தொடர்களில் நடித்துள்ளார்.
Image: bhavnalimbachia/Instagram
இருவருக்கும், 2018ஆம் ஆண்டு திருமணம் ஆனது. என்றாலும், தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்னும் ஆசை இருவருக்குமே இருந்துவந்துள்ளது.
Image: bhavnalimbachia/Instagram
ஆக, இம்மாதம், அதாவது, பிப்ரவரி மாதம், 9ஆம் திகதி, இருவரும் மொரீஷியஸ் தீவில் இரண்டாவது முறையாக, திருமணம் செய்துகொண்டுள்ளனர். இம்முறை தாங்கள் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ள தம்பதியர், சமூக ஊடகம் ஒன்றில் தங்கள் திருமணம் தொடர்பான பல புகைப்படங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.
Image: bhavnalimbachia/Instagram
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |