இரண்டாவது முறை கர்ப்பமாகியுள்ள பிரபலம்... மன்னர் சார்லசுக்கு ஆபத்து என பரவும் வதந்தி
அமெரிக்க சமூக ஊடகப் பிரபலமான ஒரு பெண் இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ள நிலையில், அவரது குழந்தையால் மன்னர் சார்லஸ் உயிருக்கு ஆபத்து என்கிற ரீதியில் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன.
மகாராணியாரின் மறைவின்போது பரவிய வதந்தி
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாழும் த்ரிஷா (Trisha Paytas, 35), ஒரு சமூக ஊடகப் பிரபலம். பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மரணமடைந்தபோது, இருவரையும் இணைத்து சமூக ஊடகங்களில் பெரும் வதந்திகள் பரவின.
மகாராணியின் உயிர் பிரிந்த அடுத்த நொடி, த்ரிஷாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்ததாகவும், அது மகாராணியின் மறுபிறவி என்றும், த்ரிஷா அந்தக் குழந்தைக்கு எலிசபெத் என்று பெயர் வைத்துள்ளதாகவும் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவ, பின்னர், அது உண்மையில்லை என மறுப்பு தெரிவிக்க, டிக்டாக்கில் நிறைமாத கர்ப்பிணியான த்ரிஷா வீடியோ ஒன்றை வெளியிடவேண்டியதாயிற்று.
Image: Getty Images
செப்டம்பர் மாதம் 14ஆம் திகதிதான் த்ரிஷாவுக்கு குழந்தை பிறந்தது. தன் மகளுக்கு Malibu Barbie Paytas-Hacmon என்று பெயரிட்டுள்ளார் அவர்.
இரண்டாவது முறை கர்ப்பம்
இந்நிலையில், தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் த்ரிஷா. சொல்லிவைத்தாற்போல இன்று காலை பிரித்தானிய மன்னர் சார்லஸ் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்ல, மீண்டும் வதந்திகள் பரவத் துவங்கியுள்ளன.
த்ரிஷாவுக்கு முதல் குழந்தை பிறந்தபோது மகாராணியார் மரணமடைந்தார். இப்போது மன்னர் சார்லஸ் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். கர்ப்பமாக இருக்கும் த்ரிஷாவுக்கு குழந்தை பிறக்கும்போது, மன்னர் சார்லஸ் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்கிற ரீதியில் சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன.
மறுப்பு தெரிவிப்பு
இந்நிலையில், தனக்கும் பிரித்தானிய ராஜ குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ள த்ரிஷா, தான் ராஜ குடும்பத்துக்கு எதிரானவள் அல்ல என்றும், தான் கர்ப்பம் தரித்ததும் ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதும் தற்செயலாக நிகழ்ந்தது, இரண்டுக்கும் தொடர்பில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் மன்னர் சார்லஸ் விரைவில் நலம்பெற தான் வாழ்த்துவதாக தெரிவித்துள்ள த்ரிஷா, தான் மே மாதம் வரை குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் கூறியுள்ளார்.
Image: @trishlikefish88/TikTok
அத்துடன், தயவு செய்து எனது இரண்டாவது பிரசவத்தையும் எதையாவது சொல்லி, கெடுத்துவிடாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ள த்ரிஷா, மகாராணி மரணமடைந்து ஒரு வாரம் ஆன பின்பு கூட தனக்குக் குழந்தை பிறக்கவில்லை என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |