அனல் பறந்த நட்புமுறை போட்டி! மண்ணைக் கவ்விய மான்செஸ்டர் சிட்டி
கிளப்களுக்கு இடையிலான நட்புமுறை போட்டியில் செல்டிக் அணி 4-3 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.
நட்புமுறை கால்பந்து போட்டி
வட கரோலினாவின் கெனான் மெமோரியல் மைதானத்தில் நடந்த நட்புமுறை கால்பந்து போட்டியில் மான்செஸ்டர் சிட்டி மற்றும் செல்டிக் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் செல்டிக் (Celtic) அணி வீரர் நிக்கோலஸ் ஜெரிட் குஹ்ன் கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக ஆஸ்கார் பாப் 33வது நிமிடத்தில் கோல் அடிக்க, அடுத்த 3 நிமிடங்களில் நிக்கோலஸ் மீண்டும் கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து கியோகோ (Celtic) மற்றும் மாக்ஸிமோ பெர்ரோனே (Man City) ஆகியோர் 44 மற்றும் 46வது நிமிடங்களில் கோல் அடிக்க ஆட்டத்தில் அனல் பறந்தது.
ஹாலண்ட் கோல்
57வது நிமிடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) அபாரமாக கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 3-3 என சமநிலையில் இருந்தது.
ஆனால், ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் செல்டிக் வீரர் லூயிஸ் பல்மா தமது அணிக்காக வெற்றி கோலை அடித்தார். இறுதியில் செல்டிக் 4-3 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் சிட்டி அணி 16 ஷாட்களும், செல்டிக் அணி 13 ஷாட்களும் அடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |