சூப்பர் ஷ்மாஷ்: கடைசி பந்தில் 4 அடித்து 193 ரன் இலக்கை எட்டிய அணி
நியூசிலாந்து சூப்பர் ஷ்மாஷ் லீக் போட்டியில் சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெல்லிங்டன் அணியை வீழ்த்தியது.
டிம் ராபின்சன் 89
சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ஸ் மற்றும் வெல்லிங்டன் அணிகளுக்கு இடையிலான Basin Reserve மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய வெல்லிங்டன் (Wellington) அணி 4 விக்கெட்டுக்கு 192 ஓட்டங்கள் குவித்தது. டிம் ராபின்சன் (Tim Robinson) 57 பந்துகளில் 3 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 89 ஓட்டங்கள் விளாசினார்.
Instant impact!
— Dream11 Super Smash (@SuperSmashNZ) January 9, 2025
Ben Sears strikes with his first ball, trapping Curtis Heaphy in front and he has to go!
The Stags now 25-1.
Watch every ball LIVE and free on TVNZ DUKE and TVNZ+!
LIVE Scoring 🔗 https://t.co/entOBU3mtx#SuperSmashNZ #Cricket #cricketnation pic.twitter.com/vKaLh2DXc9
அணித்தலைவர் நிக்கி கெல்லி 22 பந்துகளில் 32 ஓட்டங்களும், டாம் பிளெண்டெல் 29 (26) ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய சென்ட்ரல் டிஸ்ட்ரிக்ட்ஸ் (Central Districts) அணியில் ஜேக் பாய்ல் அதிரடியில் மிரட்டினார்.
ஹீப்பி 17 ஓட்டங்களில் வெளியேற, அரைசதம் அடித்த ஜேக் பாய்ல் (Jack Boyle) 43 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 77 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
வில்லியம் கிளார்க் அதிரடி ஆட்டம்
பின்னர் 46 ஓட்டங்கள் எடுத்திருந்த டேன் கிளெவர் ஆட்டமிழக்க, அணித்தலைவர் டாம் புரூஸ் 19 ஓட்டங்களில் வெளியேற ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. 8 பந்துகளில் 17 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் வில்லியம் கிளார்க் (William Clark) அதிரடி காட்டினார்.
கடைசி ஓவரின் 5 பந்தில் பவுண்டரி அடித்த அவர், அடுத்த பந்திலும் மற்றொரு பவுண்டரி விளாசி அணியை வெற்றி பெற வைத்தார்.
கிளார்க் 12 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 23 ஓட்டங்கள் விளாசினார். 77 ஓட்டங்கள் குவித்த ஜேக் பாய்ல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |