பெட்ரோல் பங்குகளில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ளலாம் - மத்திய அரசு அறிவிப்பு
எரிபொருள் விநியோகத்தில் உள்ள பாதிப்பை சரிசெய்ய பெட்ரோல் பங்குகளில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெட்ரோல் பங்குகளில் மண்ணெண்ணெய்
இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு பாரிய அளவில் வளைகுடா நாடுகளை சார்ந்திருந்தது. தற்போது அங்கு போர் நிலவி வருவதால், சீரான எரிபொருள் இறக்குமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ரஷ்யாவில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்து வருகிறது. இருந்தும் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்ய முடியவில்லை.
பொதுமக்களுக்கு எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய LPG சிலிண்டர் முன்பதிவு செய்வதில் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, மண்ணெண்ணெய் பயன்பாடே இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் அடுத்த 60 நாட்களுக்கு மீண்டும் ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வழங்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், பெட்ரோல் பங்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில அரசால் தேர்வு செய்யப்பட்ட 2 பெட்ரோல் பங்குகளில் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்பட உள்ளது.
ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் 2500 லிட்டர் வரை மண்ணெண்ணெய்யை சேமித்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த 60 நாட்கள் அல்லது மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமுலில் இருக்கும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |