Facebook பார்த்தால் கன்னத்தில் அறை விழும்! Elon Musk-ஐ அசரவைத்த இந்தியரின் ஐடியா.. வைரல் வீடியோ
இந்திய-அமெரிக்கர் ஒருவர் தான் வேலை செய்யும்போது Facebook-ஐ திறந்தால், தன்னை கன்னத்தில் அறைவதற்காகவே ஒரு பெண்ணை நியமித்தது, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கை ஆச்சரியத்தில் ஆழ்த்தியள்ளது.
இந்திய வம்சாவளியைச்சி சேர்ந்த அமெரிக்க நிறுவனரும், Pavlok நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியுமான மணீஷ் சேத்தி (), 2012-ஆம் ஆண்டில் தனது உற்பத்தித்திறனை அதிகரிக்க ஒரு புதுவித யோசையை செய்தார்.
அவர் வேலை செய்யும் போது, ஒவ்வொரு முறையும் தான் பேஸ்புக் திறக்கும் போது அவரை அறையத் தயாராக இருக்கும் ஒரு நபரைத் தேடினார். இதற்காக, கிரெய்க்ஸ்லிஸ்ட் விளமபர நிறுவனத்திற்கு சென்ற அவர், ஒரு பெண்ணை இந்த வேலைக்கு அமர்த்தினார்.
மணீஷ் சேத்தி கூற்றுப்படி, அவர் ஒவ்வொரு முறையும் பணியை விட்டு வெளியேறும் போது அவரை அறைவதற்கு காரா என்ற பெண்ணை ஒரு மணி நேரத்திற்கு 8 டொலர் சம்பளம் கொடுத்து பணியமர்த்தினார்.
அவர் நினைத்தது போல, அவரது சோதனையின் முடிவுகள் வியக்க வைத்தன. ஏனெனில், அவரது உற்பத்தித்திறன் 98% ஆக உயர்ந்தது.
9 வருடங்களுக்கு முன் நடந்த இந்த சம்பவம், தற்போது இணையத்தில் ஒருவரால் பகிரப்பட்டு, அது உலகின் நம்பர் 1 பணக்காரரான, Tesla மற்றும் SpaceX நிறுவனர் எலான் மஸ்க்கின் கண்ணில் பட, அது அவரை மிகவும் கவர்ந்துள்ளது.
ட்விட்டரில் வலம் வந்த மணீஷ் சேத்தியின் புகைப்படத்துக்கு, எலான் மஸ்க் நேற்று இரண்டு நெருப்பு எமோஜியுடன் கமெண்ட் செய்திருந்தார்.
இதனை பார்த்து மிகவும் மகிழ்ச்சியுற்ற ணீஷ் சேத்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் "இந்தப் படத்தில் இருபவன் நான் தான். எலான் மஸ்க் நான் அடைய முடியாத அளவுக்கு இரண்டு எமோஜிகளை எனக்குக் கொடுத்துள்ளாரா? இது என் Icarus சூரியனுக்கு மிக அருகில் பறக்கிறதா? எலோன் பதிவிட்ட தீ சின்னங்களால் இது குறிக்கப்பட்டதா? காலம் பதில் சொல்லும்" என தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.