மேடம் என அழைப்பதற்கு பதில் பெயர் சொல்லி அழைத்த ஊழியர் - CEO கொடுத்த வினோத தண்டனை
பொதுவாக பன்னாட்டு நிறுவனங்களில் ஊழியர்கள் சார், மேடம் என அழைப்பதற்கு பதில் பெயர் சொல்லி அழைக்கும் வழக்கம் உள்ளது.
பெயர் சொல்லி அழைத்த ஊழியர்
அதே போல், தனது நிறுவன பெண் தலைமை செயல் அதிகாரியை பெயர் சொல்லி அழைத்த மூத்த ஊழியர் ஒருவருக்கு அந்த CEO வினோத தண்டனையை வழங்கியுள்ளார்.
இதனை அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியரின் நண்பர் Reddit தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், மூத்த ஊழியர் ஒருவர், நிறுவன தலைமை செயல் அதிகாரியை பெயர் சொல்லி அழைத்துள்ளார்.
வினோத தண்டனை
அதற்கு அந்த CEO, ஊழியரை "இனிமேல் பெயர் சொல்லி அழைக்க மாட்டேன்" என ஒரு தாளில் 100 முறை எழுதி அனுப்ப சொல்லியுள்ளார்.
Got asked to write a line 100 times as punishment
byu/CombinationOdd3809 inIndianWorkplace
இத்தனைக்கும் அந்த ஊழியர் 1 வருடமாக அவரை பெயர் சொல்லிதான் அழைத்துள்ளார்.
ஆனால் திடீரென தற்போது இந்த தண்டனையை கொடுத்துள்ளார். மேலும், அவர் 100 முறை எழுதியதை அலுவலக குழுவிலும் அந்த CEO பகிர்ந்துள்ளார்.
அந்த பெண் CEO வின் செயலுக்கு இணையத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |