தோனியின் திரைப்படம் தயாரிக்கும் நிறுவனம்... அதன் CEO ஷீலா சிங்: யாரவர்?
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை உருவாக்கியுள்ள தோனி, அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக பெண் ஒருவரை நியமித்துள்ளார்.
வர்த்தக உலகில் தோனி
ஐ.பி.எல் சென்னை அணியின் தலைவராக இருக்கும் எம்.எஸ் தோனி, ஐ.பி.எல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியனது. அத்துடன் கிரிக்கெட் விளையாடுவதில் இருந்தும் மொத்தமாக வெளியேற அவர் முடிவு செய்துள்ளார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் தோனி தரப்பில் இருந்து இதுவரை அப்படியான தகவல் ஏதும் வெளியாகவில்லை. இது இவ்வாறிருக்க, வர்த்தக உலகில் தோனி தொடர்ந்து முன்னேறி வருகிறார். பல கோடிகள் முதலீட்டில் பல்வேறு நிறுவனங்களை அவர் நடத்தி வருகிறார்.
அதில் முதன்மையான ஒன்று திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களை தயாரிக்கும் நிறுவனம். இந்த நிறுவனத்தை தற்போது ஷீலா சிங் என்பவர் நிர்வகித்து வருகிறார். அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள ஷீலா சிங், நிறுவன வளர்ச்சிக்காக முக்கிய முடிவுகள் பல எடுத்துள்ளார்.
சந்தை மதிப்பு ரூ 800 கோடி
இந்த ஷீலா சிங் என்பவர் தோனியின் மனைவி சாக்ஷி சிங் என்பவரின் தாயார் தான். நிறுவன வளர்ச்சிக்கு குடும்பமே ஒன்றாக உழைப்பதாக கூறுகின்றனர். 2020ல் இருந்தே சாக்ஷி மற்றும் ஷீலா சிங் ஆகியோர் அந்த நிறுவன வளர்ச்சிக்காக உழைத்து வருகின்றனர்.
பல கோடிகள் முதலீடு செய்யப்பட்டுள்ள ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஷீலா சிங் பணியாற்றுவது என்பது இதுவே முதல் முறை. ஆனால் அவரது தலைமையின் கீழ் நிறுவனம் இதுவரை வளர்ச்சி கண்டுள்ளதாகவே கூறுகின்றனர். தமிழ் உட்பட பல மொழிகளில் திரைப்படங்களும் வெளியாகியுள்ளது.
தற்போது தோனி பொழுதுபோக்கு நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது ரூ 800 கோடி என்றே கூறப்படுகிறது. தோனியின் சொத்து மதிப்பு ரூ 1030 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |