பல லட்சம் கோடி மதிப்பிலான நிறுவனத்தின் CEO... நாளுக்கு ரூ 37 லட்சம் சம்பளம் பெறும் தென்னிந்தியர்: யாரிவர்
அமெரிக்காவில் நிறுவப்பட்ட IBM நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுபவர் ஒரு தென்னிந்தியர்.
சந்தை மதிப்பு ரூ 11.63 லட்சம் கோடி
பொதுவாக உலகெங்கிலும் பெருந்தொகை சம்பளமாக பெறும் தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்களின் வரிசையில் தலைமை நிர்வாக அதிகாரிகளும் அடங்கியுள்ளனர்.
அப்படியான ஒரு தலைமை நிர்வாக அதிகாரி தான் தென்னிந்தியரான அரவிந்த் கிருஷ்ணா. ஐஐடி கான்பூரில் பட்டம் பெற்றுள்ள இவர் தற்போது IBM நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி.
IBM நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது ரூ 11.63 லட்சம் கோடி என்றே கூறப்படுகிறது. சுமார் 30 ஆண்டு காலம் IBM நிறுவனத்தில் பணியாற்றியுள்ள அரவிந்த் கிருஷ்ணா, 2020 முதல் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
நாளுக்கு ரூ 37 லட்சம்
இந்திய ராணுவ அதிகாரியின் மகனான அரவிந்த் கிருஷ்ணா, ஆந்திராவின் கடலோரப் பகுதியில் பிறந்தவர். மட்டுமின்றி தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர். பாடசாலை நாட்களை தமிழ்நாடு மற்றும் டேராடூனில் செலவிட்ட அரவிந்த் கிருஷ்ணா, பட்டப்படிப்புக்காக ஐஐடி கான்பூரில் இணைந்தார்.
மின் பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு அமெரிக்கா சென்றுள்ளார். 1990ல் IBM நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். பல ஆண்டுகளாக அவர் பல்வேறு பதவிகளை வகித்தார்.
கடந்த ஆண்டு IBM நிறுவனத்தில் இருந்து ஊதியமாக பெற்ற தொகை ரூ 135 கோடி என்றே கூறப்படுகிறது. அதாவது நாளுக்கு ரூ 37 லட்சம் அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கிருஷ்ணாவின் ஆண்டு சம்பளம் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் என்றே கூறப்படுகிறது. அத்துடன் 8.9 மில்லியன் டொலர் மதிப்பிலான பங்குகளையும் 2 மில்லியன் டொலர் மதிப்பிலான சலுகை விலையில் பங்குகளையும் அளித்து வருகிறது என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |