14 மணி நேரம் வேலை... அறிவித்த CEOக்கு குவிந்த கொலை மிரட்டல் கடிதம்
தனது நிறுவனத்தில் இனி 14 மணி நேரம் வேலை கட்டாயம் என அறிவித்த இந்திய வம்சாவளி தலைமை நிர்வாக அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைக்கு கடும் எதிர்ப்பு
தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்துள்ள Greptile நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தக்ஷ் குப்தா, வேலைக்கான விண்ணப்பமும் குவிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
14 மனி நேரம் வேலை என்ற அவரது நிபந்தனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன், சமூக ஊடகங்களில் பெரும் விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையிலேயே தமக்கு வந்த மின் அஞ்சல்களில் 20 சதவிகிதம் கொலை மிரட்டல் என்றும் 80 சதவிகிதம் வேலைக்கான விண்ணப்பம் என்றும் தக்ஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
தமது நிறுவனத்தில் பொதுவாக வேலை நேரம் பகல் 9 மணிக்கு துவங்கி, இரவு 11 மணிக்கு முடிவடையும் என்றும், சனிக்கிழமைகளிலும் தேவை ஏற்படும் என்றால் ஞாயிறன்றும் வேலை செய்வோம் என்றும் தக்ஷ் குப்தா குறிப்பிட்டிருந்தார்.
மட்டுமின்றி, வேலையில் கவனம் செலுத்தாத, முழு உழைப்பைத் தராத ஊழியர்கள் தமது நிறுவனத்திற்கு தேவை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதலில் தமது முடிவு பொருத்தமற்றதாக இருப்பதாக தாம் உணர்ந்ததாகவும்,
வாரத்திற்கு 100 மணி நேரம்
ஆனால் இந்த வெளிப்படைத் தன்மை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் என்பதை புரிந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இது நிறுவனத்திற்கு தேவையான ஊழியர்களை பணிக்கு அமர்த்தவும், பொறுப்பற்றவர்களை வேலையில் இருந்து வெளியேற்றவும் உதவும் என்றார்.
இருப்பினும் இப்படியான சூழல் வெகு காலத்திற்கு நீடிக்காது என்றும், முதல் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு தொடரலாம் எனவும், காலப்போக்கில் அனுபவம் மிக்கவர்களை - குடும்பஸ்தர்கள், வாரத்திற்கு 100 மணி நேரம் கூட வேலை செய்ய முடியாதவர்களை நிறுவனம் வேலைக்கு அமர்த்தும் என்றார்.
இவரது இந்த விடாப்பிடியான கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும், சிலர் தற்போதைய போட்டி நிறைந்த உலகிற்கான உரிய முடிவு என பாராட்டவும் செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |