மேற்கத்திய உலகில் மிக மோசமாக நிர்வகிக்கப்படும் மாநிலம்: அதிர்ச்சியூட்டும் பட்டத்தை வழங்கிய CEO
Ceo said victoria state is worst run in australia: அவுஸ்திரேலியாவில் முன்னாள் நிதித் தலைவர் ஒருவர், விக்டோரியா மேற்கத்திய உலகில் மிக மோசமாக நிர்வகிப்படும் மாநிலம் எனக் கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னைச் சேர்ந்த முன்னாள் நிதித் தலைவர் ஒருவர், மேற்கத்திய உலகில் மிக மோசமாக நிர்வகிப்படும் மாநிலம் விக்டோரியா எனத் தெரிவித்துள்ளார்.
பிளாக்ராக் அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர்
மெல்போர்னைச் சேர்ந்த மாரிஸ் ஓ'ஷானஸ்ஸி என்பவர் பிளாக்ராக் அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் ஆவார்.
பொருளாதார நிபுணருமான இவர் நடத்திய ஆய்வில், விக்டோரியா மாகாணம் மேற்கத்திய உலகில் மிக மோசமாக நிர்வகிக்கப்படும் மாநிலம் அல்லது பிராந்திய அரசாங்கம் என்ற அதிர்ச்சியூட்டும் பட்டத்தை வழங்கியுள்ளார்.
அவர் தனது ஆய்வில் AICES என அறியப்படும் அவரது செயற்கை நுண்ணறிவு அதிகாரப் பிடிப்பு, பொருளாதா முறைகேடு மற்றும் அரசு அழுத்தம் ஆகியவற்றின் குறியீட்டில் விக்டோரியாவை முதலிடத்தில் வைத்தது.
இது நிர்வாகங்களை அவற்றின் பொருளாதார மேலாண்மை, அரசியல் அதிகாரப் பிடிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தியது.
100-க்கு 79.8 மதிப்பெண்
ஓ'ஷானஸ்ஸியின் குறியீடு விக்டோரியாவுக்கு 100-க்கு 79.8 மதிப்பெண்ணை வழங்கியது. இது அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலம் 77.4 மற்றும் இத்தாலியின் Sicily பகுதி 68 ஆகிய இடங்களைப் பிடித்தன.
மேலும், நியூ சவுத் வேல்ஸ் 61 மதிப்பெண்களுடன் 9வது இடத்தைப் பிடித்தது. அதே சமயம் குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு அவுஸ்திரேலியா முறையே 39 மற்றும் 66வது இடங்களைப் பிடித்தன.
அத்துடன் மேற்கு அவுஸ்திரேலியா 366 மாநிலங்களில் 200-வது இடத்தைப் பிடித்து, மிகச் சிறப்பாக செயல்பட்ட மாநிலமாக இருந்தது.
