அரசு பேருந்தில் சென்ற சிஇஓ டிக்கெட் கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி
பேருந்தில் பயணம் செய்தபோது சிஇஓ ஒருவர் வசூலிக்கப்பட்ட டிக்கெட் கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
கட்டணத்தை பார்த்து அதிர்ச்சி
பெங்களூருவைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரி தீபக் ஷெனாய். இவர் தனது முழங்கால் வலி காரணமாக நடைப்பயணத்தை மேற்கொள்ளாமல் கர்நாடக அரசு பேருந்து ஒன்றில் ஏறியிருக்கிறார்.
அப்போது அவரிடம் இருந்து பயண கட்டணமாக ரூ.6 மட்டுமே வசூலிக்கப்பட்டது. இதனை பார்த்த சிஇஓ அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்துள்ளார்.
இவர் செபி-யில் (SEBI) பதிவுசெய்யப்பட்ட போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவை (PMS) நிறுவனமான கேப்பிட்டல்மைண்ட் (Capitalmind) இன் தலைமை செயல் அதிகாரி (CEO) மற்றும் நிறுவனர் ஆவார்.
இவர் தனது அரசு பேருந்து பயணம் குறித்து சமூக வலைதளத்தில் தற்போது பதிவிட்டது தான் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
அவர் தனது பதிவில், "இன்று நான் 6 ரூபாய் கட்டணத்தில் பேருந்தில் பயணம் செய்தேன். பின்னர் அலுவலகத்திற்கு 30 நிமிடங்கள் நடந்தேன்.
பேருந்து கட்டணம் 6 ரூபாயாக இருப்பது திகைப்பாகவே இருக்கிறது. மேலும், பேருந்தில் யூபிஐ க்யூஆர் (UPI QR) ஸ்கேனரும் பொருத்தப்பட்டிருந்தது" என்று கூறியுள்ளார்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |