என்னது... நிர்வாகத்திற்கும், ஜடேஜாவுக்கும் மோதலா? விளக்கம் அளித்த சிஇஓ காசி விஸ்வநாதன்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஜடேஜாவுக்கு, சென்னை அணி நிர்வாகத்திற்கும் இடையே கடுமையான மோதல் இருந்ததா என்பது குறித்து அந்த அணி நிர்வாகத்தின் சிஇஒ காசி விஸ்வநாதன் விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஜடேஜாவின் ஆட்டம் குறித்து சென்னை அணி நிர்வாகம் பாராட்டவில்லை என்றும், இதனால் நிர்வாகத்திற்கும், ஜடேஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதல் வெடித்தாகவும் தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியானது.
இந்நிலையில், நிலவி வரும் இந்தக் கருத்துக்கு சென்னை அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம் கொடுத்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஜடேஜா தனது சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். ஜடேஜா மைதானத்தில் இறங்கும்போது 5 அல்லது 10 பந்துகள் மட்டும் தான் இருக்கும். அந்த சந்தர்ப்பத்தில் ஜடேஜா திறமையாக விளையாடுவார். ஆனால் சில சமயங்களில் அந்த மாதிரியான தருணங்கள் சிறப்பாக அவருக்கு அமையாது.
ஜடேஜாவுக்கு பின்புதான் தோனி மைதானத்தில் களமிறங்குவார். ஜடேஜா எப்போதெல்லாம் களத்தில் இறங்குகிறாரோ அப்போதெல்லாம் ரசிகர்கள் தோனியை எதிர்பார்ப்பார்கள். கோஷங்களை எழுப்பி, ஜடேஜா உடனே அவுட்டாக வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவார்கள்.
இதனால் ஜடேஜாவிற்கு சில சமயங்களில் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் இது குறித்து ஒருபோதும் ஜடேஜா குற்றமோ, புகாரோ கொடுத்ததில்லை.
கடைசி போட்டிக்கு பிறகு நான் ஜடேஜாவை சமாதானம் செய்ததாக எல்லோரும் நினைத்துக் கொண்டார்கள். நாங்க இரண்டு பேருமே போட்டியைத்தவிர வேற எதையும் பேசிக்கொள்ள மாட்டோம். சென்னை அணியில் எந்த வீரருக்கும் யாருடனும் பிரச்சினை கிடையாது.
எனக்கு தோனி மீதும், ஜடேஜா மீதும் நல்ல மரியாதை உள்ளது. இறுதிப்போட்டியில் நீங்களே பார்த்திருப்பீர்கள். தோனிக்காக தனது ஆட்டத்தை அர்ப்பணித்தார் ஜடேஜா என்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |