ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனை..முதல் ஆளாக சாதித்த சஹால்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் யுஸ்வேந்திர சஹால் ஐபிஎல் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் ராஜஸ்தான் அணியின் யுஸ்வேந்திர சஹால் (Yuzvendra Chahal) ஒரு விக்கெட் வீழ்த்தியதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் 200 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் பந்துவீச்சாளர் என்ற இமாலய சாதனையை படைத்தார்.

153 போட்டிகளில் விளையாடியுள்ள சஹால் இந்த சாதனையை செய்துள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 5/40 ஆகும்.
ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்
- சஹால் - 200 விக்கெட்டுகள்
- டி.ஜே.பிராவோ - 183 விக்கெட்டுகள்
- பியூஷ் சாவ்லா - 182 விக்கெட்டுகள்
- புவனேஷ்வர்குமார் - 174 விக்கெட்டுகள்
- அமித் மிஸ்ரா - 173 விக்கெட்டுகள்
- சுனில் நரைன் - 172 விக்கெட்டுகள்
- ரவி அஸ்வின் - 172 விக்கெட்டுகள்
- லசித் மலிங்கா - 170 விக்கெட்டுகள்
- ஜஸ்பிரித் பும்ரா - 158 விக்கெட்டுகள்
- ரவீந்திர ஜடேஜா - 156 விக்கெட்டுகள்
"People throw stones at you, and you convert them into milestones.” - Sachin Tendulkar pic.twitter.com/5v5dtSj3He
— Rajasthan Royals (@rajasthanroyals) April 22, 2024
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |