T20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்கள்; முதல் இந்திய வீரராக சாதனை படைத்த சாஹல்
Yuzvendra Chahal Becomes 1st Indian take 400 t20 wickets: T20 கிரிக்கெட்டில் 400 விக்கெட்களை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை யுவேந்திர சாஹல் படைத்துள்ளார்.
யுவேந்திர சாஹல் சாதனை
2026 ஆம் ஆண்டின் சையத் முஸ்தாக் அலி தொடர் கடந்த நவம்பர் 14 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 6 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
நேற்று நடைபெற்ற ஹரியானா மற்றும் தமிழ்நாடு அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஹரியானா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதில், 3 விக்கெட்களை கைப்பற்றிய ஹரியானா வீரர் யுவேந்திர சாஹல், டி20 போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சாஹல் ஹரியானா அணிக்காக 71 டி20 போட்டிகளில் 68 விக்கெட்டுகளையும், இந்திய அணிக்காக 81 போட்டிகளில் 98 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
மேலும், ஐபிஎல் தொடரில்,4 அணிகளுக்காக 188 போட்டிகளில் 233 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள சாஹல், 2011ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6 சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளில் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்த பட்டியலில், 366 விக்கெட்களுடன் புவனேஷ்வர் குமார் 2வது இடத்திலும், 354 விக்கெட்களுடன் பும்ரா 3வது இடத்திலும் உள்ளனர்.