உன் இடத்திற்கு போ.. டெல்லி வீரரை தலையில் தட்டிய சாஹல்! வீடியோ
டெல்லி அணியினர் நோ-பால் கேட்டு வாதிட்டுக் கொண்டிருந்தபோது, ராஜஸ்தான் வீரர் சாஹல் செய்த விடயம் வேடிக்கையை ஏற்படுத்தியது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் நிகழ்ந்த நோ-பால் சர்ச்சை பூதாகரமாகியுள்ளது. அந்த சமயம் நடுவரிடம் நோ-பால் கேட்டு பாவெல் அதிருப்தி தெரிவித்தபோது, மற்றோரு துடுப்பாட்ட வீரரான குல்தீப் யாதவ் அவருக்கு அருகில் சென்றார்.
அப்போது அங்கு வந்த சாஹல், உன் இடத்திற்கு போ என்று குல்தீப்பை தடுத்து நிறுத்தினார். ஆனால் குல்தீப் அதற்கு மறுப்பு தெரிவிக்க, அவரது தலையில் விளையாட்டாக தட்டி சாஹல் இழுத்து சென்றார்.
குல்தீப்பும், சாஹலும் நண்பர்கள் என்பதால் இந்த நிகழ்வு விளையாட்டாக பார்க்கப்பட்டது. தற்போது இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Meanwhile Chahal & Kuldeep #pant #noball #pant ? pic.twitter.com/A4975pt3uH
— Troyboi™ (@1ove_it786) April 22, 2022