போட்டிக்கு நடுவே தென் ஆப்பிரிக்க வீரரை உதைத்த சஹால்! வைரலாகும் வீடியோ
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சஹால், ஷாம்ஷி இருவரும் ஒன்றாக ஆர்.சி.பி அணிக்காக விளையாடி இருக்கிறார்கள்
மூன்று சீசன்களில் ஒன்றாக விளையாடியுள்ள சஹால், ஷாம்ஷி இருவரும் நெருங்கிய நண்பர்களாக இப்போதும் இருக்கிறார்கள்
கவுகாத்தியில் நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரரை இந்திய வீரர் சஹால் உதைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி கவுகாத்தியில் நேற்று நடந்தது. தென் ஆப்பிரிக்க அணி துடுப்பாட்டம் செய்து கொண்டிருக்கும்போது இடைவேளை விடப்பட்டது.
அப்போது துடுப்பாட்ட வீரர்களுக்கு தென் ஆப்பிரிக்க வீரர் ஷாம்ஷி குளிர்பானங்களை கொடுப்பதற்காக வந்திருந்தார். அவர்களுடன் ரிஷிப் பண்ட்-வும் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
Yuzi bhai ?#INDvSA #CricketTwitter pic.twitter.com/CTkXqpw2A5
— ...... (@Brahman_Kuldip) October 2, 2022
திடீரென அங்கு வந்த சஹால் தென் ஆப்பிரிக்க வீரர் ஷாம்ஷியை பின்னாடி இருந்து உதைத்தார். அவர் ஏன் இவ்வாறு செய்கிறார் என ரசிகர்கள் ஒரு கணம் திகைத்தனர். ஆனால் பொறுமையாக திரும்பிய ஷாம்ஷி, சஹாலின் தோளில் கையை போட்டு மகிழ்ச்சியாக பேசினார்.
பின்னர் இருவரும் ஒற்றுமையாக களத்தை விட்டு வெளியேறினர். சஹால் எப்போது இதுபோல் விளையாட்டுத்தனங்களை மைதானத்தில் நிகழ்த்துபவர் தான் என்பதால் இது சர்ச்சையாகவில்லை. எனிமும் சஹாலின் சேட்டைகளில் இதுவும் ஒன்று என இந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.