8 ஆண்டுகள் விளையாடியும் RCB தெரிவு செய்யவில்லை: வேதனை தெரிவித்த சஹால்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 8 ஆண்டுகள் விளையாடியும் தன்னை தெரிவு செய்யாதது வருத்தமளித்ததாக யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார்.
சஹாலின் அபார பந்துவீச்சு
கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி சஹால் 21 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அதற்கு முன்பு 2022ஆம் ஆண்டியின் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி Purple தொப்பியை வென்றிருந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதலில் அறிமுகமான சஹால், 2014ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 8ஆண்டுகள் விளையாடினார்.
ஆனால், 2022ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் RCB அவரை தக்கவைத்துக் கொள்ளவில்லை. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
வேதனை தெரிவித்த சஹால்
இதுகுறித்து சஹால் தற்போது மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், 'நான் அங்கு தேர்ந்தெடுக்கப்படாதபோது நான் மிகவும் கோபமாக இருந்தேன். நான் அவர்களுக்காக 8 ஆண்டுகள் கொடுத்தேன். சின்னசாமி எனக்கு மிகவும் பிடித்த மைதானம். நான் RCB பயிற்சியாளர்களிடம் பேசவில்லை.
நான் அவர்களுக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியில், நான் யாருடனும் பேசவில்லை. ஏலத்தில் என்னை தக்கவைப்பதாக உறுதி அளித்தார்கள். ஆனால் ஒரு தொலைபேசி அழைப்போ, என்னை தொடர்புகொள்ளவோ இல்லை. குறைந்தபட்சம் என்னிடம் பேசவும் இல்லை.
இதனால் நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். ஏலம் எடுக்கும் இடம் மிகவும் கணிக்க முடியாதது என்பதை நான் உணர்கிறேன். அதனால் எது நடக்கிறதோ அது நன்மைக்கே நடக்கும் என்று சமாதானம் செய்தேன்' என தெரிவித்துள்ளார்.